Published : 05 Jun 2018 09:18 AM
Last Updated : 05 Jun 2018 09:18 AM

மோடி கருத்துக்கு சீனா பாராட்டு

இந்தியா - சீனா உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘‘எல்லையில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவும் சீனாவும் அறிவுபூர்வமாகவும் முதிர்ச்சியுடனும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றன’’ என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்பட்டால் உலகின் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் கூறினார்.

மோடியின் பேச்சுக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், ‘‘இந்தியா - சீனா உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய நேர்மறையான கருத்து வரவேற்கத்தக்கது.இதை பாராட்டுகிறோம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x