

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி இன்று (வெள்ளிக்கிழமை) கூறும்போது, பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் 12 பேர் வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டனர். இராக் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.
ஐஎஸ் உடனான இராக்கின் போர்
கடந்த 2014-ம் ஆண்டில் இராக்கின் மோசூல் நகரம் உட்பட அந்த நாட்டின் பெரும் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஐஎஸ. தீவிரவாதிகளுக்கு எதிராக இராக் ராணுவம் போரில் ஈடுபட்டது.
ஐஎஸ. வசம் இருந்த அனைத்து பகுதிகளையும் இராக் ராணுவம் படிப்படியாக மீட்டது. இன்னும் சில இடங்களில் ஐஎஸ் தீவிராவாதிகளுக்கு எதிராக இராக் போரிட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகளை இராக் அரசு தூக்கிலிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 100 ஐஎஸ் தீவிரவாதிகளை இராக் தூக்கிலிட்டுள்ளது.