

சீனாவின் யுன்னான் மாகாணம் லுடியானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 398 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஏராளமானவர்களின் நிலைபற்றித் தெரியவில்லை.
ஜாவாடாங் மற்றும் கியூஜிங் நகர்களில் 10.08 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,801 பேர் காயமடைந்துள்ளனர். அந்த நகரங்களிலிருந்து 2 லட்சத்து முப்பதாயிரம் பேர் அவசர அடிப் படையில் வெளியேற்றப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. லுடியான் பகுதியில் 319 பேரும், கியாவோஜியா பகுதியில் 66 பேரும், ஜாவோயாங் மாவட்டத்தில் ஒருவரும், ஹுய்லி பகுதியில் 12 பேரும் உயிரிழந் துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீனப் பிரதமர் லீ கெகியாங் நேரில் பார்வையிட்டார்.
மீட்புப் பணியில் சிக்கல்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த மழை பொழிவதால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள லுடியான் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தட்பவெப்ப நிலை 17 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
திடீர் ஏரி
நிலநடுக்கத்தால் ஜியான் பியான் கிராமத்தில் திடீர் ஏரி உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மீட்டர் உயரம் என்ற அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே, அப்பகுதியிலிருந்து மக் களை மீட்புப் படையினர் வேகமாக வெளியேற்றி வருகின்றனர்.
உயிர்தப்பியவர்களில் பலரும் சேறும்சகதியுமான சாலைகளில் அமர்ந்து குடிநீர் மற்றும் உணவு களை எதிர்பார்த்துக் காத்திருக்கின் றனர். பலர் மிகக் குறைந்த ஆடையுடன் உயிர்தப்பியுள்ளனர். அவர்கள் மழையில் நனைந்து நடுங்கி வருகின்றனர்.
மீட்புக் குழுவினர் விரைவு
யுன்னான் மாகாணத்துக்கு 5,000 ராணுவ வீரர்கள் உள்பட 7,000 பேர் மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புக்குழுவினர் மற்றும் உபகரணங்கள் அடங்கிய இரு கார்கோ விமானங்களை விமானப் படை பெய்ஜிங் மற்றும் செங்டு பகுதியிலிருந்து அனுப்பியுள்ளது.
80 ஆயிரம் கட்டிடங்கள் முழுமை யாக இடிந்துள்ளன. 1.24 லட்சம் கட்டிடங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர் களைக் கண்டறிவதற்காக 8 மோப்ப நாய்களும், 160 உயிர்வாழ் கண்டுபிடிப்புக் கருவி களுடன் மீட்புப் படையினரும் குழுமியுள்ளனர். 141 தீயணைப்பு வாகனங்கள், 937 தீயணைப்பு வீரர்கள், 17 மோப்ப நாய்கள் தீயணைப்புத் துறை சார்பில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளிலிருந்து 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 36 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 1,300-க்கும் அதிமானோர் அங்கி ருந்து பத்திரமாக வெளியேற் றப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில், அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுமானவரை அனைவரையும் உயிருடன் மீட்கவும், மீட்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்க வும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தர விட்டுள்ளார்.