Published : 09 Jun 2018 08:34 AM
Last Updated : 09 Jun 2018 08:34 AM

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: கராச்சியில் இம்ரான் கான் வேட்புமனு தாக்கல்

பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் முஸ்லீம் லீக்’ (நவாஸ்) கட்சி அரசின் பதவிக்காலம் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசிரூல் முல்க் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் -இ - இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், கராச்சி நகரில் உள்ள ‘என்.ஏ. -243’ தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முந்தைய தேர்தல்களைப் போலவே இந்த முறையும், பல முக்கிய தலைவர்கள் கராச்சி யில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x