Published : 05 Jun 2018 02:51 PM
Last Updated : 05 Jun 2018 02:51 PM

ட்ரம்ப் - கிம் சந்திப்பு நேரம் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு குறித்த நேரம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். அதன்படி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.

இந்த நிலையில் சந்திப்புக்கான நேரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில்,  "இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு சிங்கப்பூர் உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிங்கப்பூரில் இரு அதிபர்களும் சந்திக்கும் இடம் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருவரது  சந்திப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில் அவர்களது சந்திப்புகள் குறித்து குறிப்பிட்ட தகவலை மட்டுமே சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.

தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா உதவியதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் ட்ரம்ப் - கிம் இடையே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை உலக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x