Published : 09 Jun 2018 12:42 PM
Last Updated : 09 Jun 2018 12:42 PM

பெருவில் கண்டறியப்பட்ட கொலம்பியர்களின் குழந்தை பலி ரகசியம்

மத்திய அமெரிக்க நாடான பெருவில் கொலம்பிய நாட்டின் சிமு கலாச்சாரத்தில் ஏராளமான குழந்தைகள் கடவுள் நம்பிக்கையில்  பலி கொடுக்கப்பட்டத்தை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கேம்பிரியல் பிரிட்டோ கூறும்போது,  இதுவரை கொலம்பியாவின் சிமு கலாச்சாரத்தில் 56 குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டுள்ளதை பெருவின் ஹன்ச்சாகோ நகரில்  கண்டறிந்துள்ளோம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

கடவுள் நம்பிக்கைக்காக பலி கொடுக்கப்பட்ட இந்த குழந்தைகளின் வயது சுமார் 6 முதல் 14 உள்ளாக இருக்கக்கூடும். இதில் சுவாரஸ்சியமான தகவல் என்னவென்றால் அந்த குழந்தைகளின் கன்னத்தில் ஒரு வெட்டு காணப்படுகிறது” என்றார்.

பெருவில் உள்ள ஹான்சாகுட்டோவில் 550 ஆண்டுகளுக்கு முன் பலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் கண்டறியப்பட்டதாக நேஷனல் ஜியாகிரஃபி வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் பெருவில் கொலம்பியர்களின் குழந்தை பலி கண்டறியப்படுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x