

நேபாள நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, அந்நாட்டு மக்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தது என நேபாளத்தின் பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியிருக்கிறது.
நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, நேபாள மக்களின் உள்ளங்களை நெகிழ வைத்ததாக நேபாளத்தின் 'டெய்லி மண்டே' பத்திரிகை புகாழாரம் சூட்டியுள்ளது.
நேபாள மக்களுக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, நேபாள மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும், அவர்களின் கலாச்சாரத்தை உணர்ந்த அரசியல் ரீதியான பேச்சாக அமைந்ததாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்தியப் பிரதமர் நேபாளம் சென்ற நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
மோவோயிஸ்டுகள் பிடியிலிருந்த நேபாள மக்கள், 2006-ஆம் ஆண்டு, தோட்டாக்களைத் தூக்கி எறிய ஓட்டுகளை நம்பி, தங்களுக்கான அரசைத் தேர்வு செய்தது பாராட்டக்குரியது என்று மோடி தனது பேச்சின்போது தெரிவித்தார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு, நேபாள மக்கள் பலத்த கரவொலியை எழிப்பி, அவரது பேச்சுக்கு ஆரவாரம் செய்தனர். மேலும், உரையின் நடுவே புத்தரின் பெயரை, மோடி ஐந்து முறை உச்சரித்தார் என்றும், இதனைக் கண்டு நேபாள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சிரியமடைந்ததாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.