Published : 04 Jun 2018 11:17 AM
Last Updated : 04 Jun 2018 11:17 AM

போகும் வழியில் வாங்கிய லாட்டரியில் ரூ. 18 கோடி பரிசு: அபுதாபியில் நைஜீரிய இந்தியருக்கு காத்திருந்த அதிருஷ்டம்

நைஜீரியாவில் வசித்து வரும் இந்தியர் ஒருவர், கேரளாவில் இருந்து செல்லும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் வாங்கிய லாட்டரியில் 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை பெற்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் விற்கப்படும் பிக் டிக்கெட் லாட்டரி மிகவும் பிரபலம். சமீபத்தில், இந்த பிக் டிக்கெட் லாட்டரியில் 5 இந்தியர்கள் அதிருஷ்டசாலிகமாக இடம் பிடித்து பரிசுத் தொகை பெற்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியர் ஒருவருக்கு அபுதாபி லட்டாரியில் 21 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. இதுபோலவே, இந்த ஆண்டு ஜனவரியில் அங்கு ஓட்டுநராக பணியாற்றும் ஒருவருக்கு 21 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

இந்நிலையில் நைஜீரியாவில் வாழும் இந்தியரான டிக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு பிக் டிக்கெட் லாட்டரியில் 10 மில்லியன் திர்காம் பரிசு விழந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த அவர் நைஜீரியாவில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கேரளாவில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்கக வந்தார். பின்னர் நைஜீரியா திரும்பிச் செல்லும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கியுள்ளார். அதில் அவருக்கு பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 18 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ளது. அபுதாபி சென்ற இடத்தில் லாட்டரி வாங்கி 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது அபிரகாமை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிசுத் தொகை கிடைத்தது இதுகுறித்து அபிரகாம் கூறியதாவது:

எனக்கு எப்போதும் கடவுளின் அன்பு மீது நம்பிக்கை உண்டு. அவரது கருணையால் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறேன். கேரளாவில் உள்ள எனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு நைஜீரியா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டேன். அன்று காலையில் எனக்கு ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து தனிப்பட்ட போன் ஒன்று வந்தது. இதனை நல்ல செய்தியாகவே எண்ணினேன்.

இதன் அடிப்படையில் நைஜீரியா செல்ல திட்டமிட்ட நான், அபுதாபி சென்று மாற திட்டமிட்டேன். அபுதாபி விமான நிலையத்தில் பிக் டிக்கெட்டில் ஒரு பரிசு சீட்டு வாங்கினேன். 18 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதன் மூலம் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்துள்ளது. பணம் சம்பாதிப்பதற்காக தான் குடும்பத்தை வி்ட்டு நைஜீரியா சென்றேன். கடவுளின் அருளால் எனக்கு பரிசு கிடைத்துள்ளது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x