

ஜி 7 நாடுகள் மாநாடு தொடர்பாக நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் அமர்திருக்க தலைவர்கள், ட்ரம்பிடம் பேசும்படியான புகைப்படம் ஒன்று வைரலாக பரவியது. இந்த நிலையில் இந்தப் புகைப்படத்துக்கு ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெற்றது.
இதில் ஜி7 நாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பொறுமையில்லாமல் நடந்துக் கொண்டார் என செய்திகள் வெளியாகின.
கூடுதலாக, ஜி 7 நாடுகள் மாநாடு தொடர்பாக நடந்தப்பட்ட கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் அமர்திருக்க கூட்டமைப்பில் இருந்த பிற நாடுகளின் தலைவர்களின் ட்ரம்பிடம் பேசும்படியான புகைப்படம் ஒன்று வெளியானது.
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம்மை சந்திந்து நாடு திரும்பியுள்ள ட்ரம்ப் இது தொடர்பான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்கள் கனடாவில் நடைபெற்ற மாநாட்டில், ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் நான் சுமுகமான போக்கை கடைப்பிடிக்கவில்லை என்று கூறுகிறது. அவர்கள் தவறு என்று மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.
நான் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலுடன் சிறந்த நட்புக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் வெறும் தவறான புகைப்படங்களை மட்டும் காட்டுக்கின்றன. நான் வைத்த கோரிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பிற அமெரிக்க அதிபர்கள் வைத்திருக்க மாட்டார்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஜி 7 மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்களுடன் தான் எடுத்த கொண்ட புகைப்படத்தையும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படங்கள்