

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில், "ஹவாய் தீவுகளில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக ஹவாய் தீவுகளில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து எரிமலை சீற்றமும் ஏற்பட்டுள்ளது.
ஹவாய் தீவிலுள்ள கீலவேயா எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதால், எரிமலையிலிருந்து லாவா குழம்ப்புகள் வெளிவருவதால் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஹவாய் தீவுகளிlலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹவாய் தீவில் வசிக்கும் மர்சா கூறும்போது, "எரிமலை தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.