Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

ரஷ்யாவுக்கு ஜி7 நாடுகள் எச்சரிக்கை

தனது அதிகாரத்தின் மூலம் உக்ரைனை சீர்குலைக்க ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரஷ்யாவின் மீது தடை விதித்திருக்கின்றன. இந்நிலையில் ஜி7 நாடுகள் என்றழைக்கப்படுகிற பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை கூட்டாகச் சேர்ந்து ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

"சட்டத்திற்குப் புறம்பாக கிரிமியாவைத் தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது மிகப்பெரும் தவறு. அதைத் தொடர்ந்து தற்போது உக்ரைனைச் சீர்குலைக் கும் ரஷ்யாவின் முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரஷ்யாவின் நடவடிக்கைகள் எல்லாம் சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகும். ரஷ்யா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனில், தடை மேலும் இறுகும்" என்று ஜி7 நாடுகள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள் ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதி களால் மலேசிய விமானம் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை விசாரிக்க 'நேர்மையான, முழுமையான, தடையற்ற மற்றும் வெளிப்படையான சர்வதேச விசாரணை' தேவை. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, விமானத் தாக்கு தல் நடந்த மற்றும் சுற்றியுள்ள இடங்களில் போர் நிறுத்தத்தை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த விபத்துக்குப் பிறகாவது ரஷ்யப் படைகள் உக்ரைன் எல்லையில் ஊடுருவுவதை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் ரஷ்யா தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. ரஷ்யா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும். ரஷ்யா தன்னைத் திருத்திக் கொள்வதற்கு அது ஓர் வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறோம்.

தற்போது உக்ரைனில் தேவைப்படுவது அமைதி மட்டுமே. அதற்கு அந்நாட்டு அதிபர் பெட்ரோ அமைதித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x