காஸாவில் 2000-க்கும் அதிகமானோர் பலி: இஸ்ரேல்- ஹமாஸ் இருமுனையிலும் தாக்குதல் தொடர்கிறது

காஸாவில் 2000-க்கும் அதிகமானோர் பலி: இஸ்ரேல்- ஹமாஸ் இருமுனையிலும் தாக்குதல் தொடர்கிறது
Updated on
1 min read

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் பேங்க்கில் பள்ளி மாணவர்கள் 3 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

காஸா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2000-க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2,016 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 10,200-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும். மேலும் பலியான இவர்களில் 541 குழந்தைகள், 250 பெண்கள், 95 முதியவர்கள் அடங்குவர் என்றும் அந்நாட்டு ராணுவத் தரப்பில் கூறப்படுகின்றது.

அதே வேளையில், கடந்த ஜூன் 12- ஆம் தேதி, இஸ்ரேல் நாட்டின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ஹெப்ரான் நகரின் பள்ளியில் படித்து வந்த 3 மாணவர்கள் காணாமல் போனார்கள். மாயமான மாணவர்களை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் வெஸ்ட் பேங்க் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் கிளர்ச்சியாளகள் தான் இந்த படுகொலையை நிகழ்த்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in