Published : 05 May 2018 11:34 AM
Last Updated : 05 May 2018 11:34 AM

அமெரிக்காவில் இனவெறியால் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்காவில் இந்திய பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்  கொல்லப்பட்ட  வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின்  ஒலந்தே நகரத்தில் பார் ஒன்றில்  இனவெறி காரணமாக கடந்த வருடம் பிப்ரவரி 22-ம் தேதி இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டார்.

 ஸ்ரீனிவாஸைக் கொன்ற அமெரிக்க கடற்படை வீரர் ஆடம் பூரிண்டன் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீனிவாஸை கொன்றதுடன், அவரது நண்பர் அலோக் மதசானியை கொல்ல முயற்சி செய்ததாக  ஆடம் பூரிண்டன் மீது இரு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தது.

இந்நிலையில். ஆடமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின்போது ஸ்ரீனிவாசா குச்சிபோட்லாவின் குடும்பத்தினர் யாரும் நீதிமன்றதுக்கு  வருகை தரவில்லை.

எனினும் இதுகுறித்து ஸ்ரீனிவாசாவின் மனைவி சுனயனா அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.

அதில், "நாங்கள் வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இருந்திருப்போம். ஆனால் நான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதனால் உண்டாகும் துன்பம் ஏற்றுக் கொள்ள முடியாதது. 

நீங்கள் ஜெயிலில் கழிக்கும் நாட்களில் ஒரு நாள் உங்கள் தவறை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x