

இராக்கின் மேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் உள்ள யாஷிதி பகுதியை மீட்க, அந்நாட்டிற்கு மேலும் 130 ராணுவத்தினரை அமெரிக்கா அனுப்புகிறது.
இராக் ராணுவத்தினருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்குமான போரில் இராக்கின் பல நகரங்கள் கிளர்ச்சி அமைப்பினரால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மனித உரிமை ரீதியிலான உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இந்த நிலையில், இராக்கின் மேற்கு பகுதியில் யாஷிதி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்க கூடுதல் ராணுவத்தை அனுப்புமாறு அமெரிக்காவுக்கு இராக் கோரிக்கை விடுத்தது.
இதனை அடுத்து அந்நாட்டுக்கு கூடுதலாக 130 ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் சக் ஹேகல் உறுதிபடுத்தியுள்ளார்.
கூடுதல் ராணுவ வீரர்களுள் கடற்படை, சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்குவர். இவர்கள் யாஷிதி மற்றும் சிங்கர் மலைப்பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து பதுங்கியிருக்கும் பழங்குடி மக்களை மீட்க உதவி அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.