அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்: பிரபல ஜோதிடர் கணிப்பு

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்: பிரபல ஜோதிடர் கணிப்பு

Published on

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல்போட்டியிலிருந்து ஜோ பைடன்விலகுவார் என அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் எமி டிரிப்துல்லியமாக கணித்திருந்தார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என எமி டிரிப், நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

டிரம்ப் ஜாதகத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கிறார். இராகுவும்நல்ல ஸ்தானத்தில் உள்ளார். இதனால் அவர் அமெரிக்காவின் 48-வது அதிபராக பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது. டிரம்பின் வாழ்க்கையில், கணிக்க முடியாத சிலவிஷயங்களும் ஏற்படலாம்.

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்தில் பல அரசியல் வன்முறை சம்பவங்களும் ஏற்படலாம். இவ்வாறு எமி டிரிப் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in