இளவரசர் ஹாரி நாளை திருமணம்: இங்கிலாந்தில் உற்சாகம்

இளவரசர் ஹாரி நாளை திருமணம்: இங்கிலாந்தில் உற்சாகம்
Updated on
1 min read

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெக்கன் மார்கல் திருமணம் இங்கிலாந்தில் நாளை நடைபெறுகிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே  மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) இங்கிலாந்தில் உள்ள வின்சர் மாளிகையில் ஹாரி  மற்றும் மெக்கனின் திருமணம் நடைபெறுகிறது.

அரசு குடும்பம் திருமணம் என்பதால், இங்கிலாந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருமணத்தை பார்பதற்காக வருகை தந்துள்ளனர். இங்கிலாந்து முழுவதும் கடைகளில் ஹாரி மற்றும் மெக்கன் மார்கலின் உருவம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், உடைகள், பொம்மைகள் என் பலவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்வதன் மூலம் இங்கிலாந்து இளவரசியாகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மெக்கன் பெற இருக்கிறார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in