ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம்: கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம்: கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வடகொரிய அதிபர் கிம்முக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து கிம்முக்கு ட்ரம்ப் நிபந்தனைகளை விதித்திருந்தார்.

அதில் அணுஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. இதற்கு கிம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் லிபியா அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் கிம்முக்கு ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ற் எச்சரித்துள்ளார். இது குறித்து பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மைக் பென்ஸ், “ அடுத்த மாதம் நடைபெறும் கிம் - ட்ரம்ப் சந்திப்பில் வடகொரிய அதிபர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம்.

அவ்வாறு செய்தால் அது அவருடைய பெரிய தவறாக இருக்கும். தவறு ஏதேனும் நடந்தால் அமெரிக்கா - வடகொரியா இடையே நடைபெறும் உச்சி மாநாட்டிலிருந்து ட்ரம்ப் வெளியேறுவார்”  என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஜான் போல்டன் கூறிய சில கருத்துகளால் அமெரிக்கா - வடகொரியா இடையே நடைபெறும் மா நாட்டில் கலந்து கொள்ளாமல் வடகொரியா விலக நேரிடும் வடகொரிய எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் மிஸ் பண்ணிடாதீங்க

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in