

ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த டமாஸ்கஸ் நகரம் முழுமையாக சிரிய ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
ஆறு வருடங்களுக்கு பிறகு டமாஸ்கஸ் முழுமையாக சிரிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜென் அலி மயூப் கூறும்போது, "டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.
மேலும் சிரியாவில் பல்வேறும் இடங்களில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த ஆறு ஆண்டுகளாக போரிட்டு வந்த கிளர்ச்சியாளர்கள் 80% தோல்வி அடைந்ததால் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளித்தன என்பது குறிபிடத்தக்கது.