Published : 24 May 2018 04:45 PM
Last Updated : 24 May 2018 04:45 PM

ஈரான் அணுஆயுத ஒப்பந்தம்; சீனா ஜெர்மனி துணை இருக்கும்: ஏஞ்சலோ மெர்கல்

ஈரானின் ஆணுஆயுத ஒப்பந்தத்துக்கு ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் துனை இருக்கும் என்று  ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறியுள்ளார்.

சீனாவுக்கு  இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனா சென்றடைந்த மெர்க்கல்  கிரேல் ஹாலில்  சீனா பிரதமர் லீ கெக்கியாங் உடனான சந்திப்பில் இதனை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

 மெர்க்கலின் இந்தச் சீன சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார, வணிகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஜூன் 12 ஆம் தேதி கிம் - ட்ரம்ப் இடையே நடைபெறும் சந்திப்பு குறித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இதனிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க மிஸ் பண்ணிடாதீங்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x