இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 உயிரிழப்பு
Updated on
1 min read

சுலாவெசி: இந்தோனேசிய நாட்டின் சுலாவெசி தீவில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 45 பேர் மாயமாகி உள்ளனர். இந்தச் சம்பவம் அங்குள்ள கோரோண்டாலோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்டுள்ளது. இதில் சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமல்லாது அதன் அருகில் உள்ள வசித்து வந்த மக்களும் உயிரிழந்தனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மாயமாகி உள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம், காவல் துறை, மீட்பு படையினர் என மொத்தம் 164 ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு படையினர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. மழை தொடர்வதாலும், சாலை சேற்றினால் சூழப்பட்டு இருப்பதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்திரத்தை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்வதற்கான சாதகம் இருந்தால் மட்டுமே அந்த பணி நடக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

79 பேர் தங்கத்தை எடுக்கும் நோக்கில் சுரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய முறையில் இந்த சுரங்க பணியை அவர் மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வெள்ள எச்சரிக்கை இந்த பகுதியில் தரப்பட்டு இருந்ததாக பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் மழை காலம். இந்த நாட்களில் அங்கு மண் சரிவு ஏற்படுவது வழக்கம். ஆனால், ஜூலையில் மழை பொழிவது மிகவும் அரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in