Published : 15 May 2018 11:23 AM
Last Updated : 15 May 2018 11:23 AM

மெலானியா ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், "அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார்.  சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க உள்ளார்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியாவை இன்று மருத்துவமனையில் பார்வையிட உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் என்று  வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x