

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், "பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்வாகா மற்றும் கிழக்கு பஞ்சாப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது”என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்களுக்கு அச்சம் அளித்ததாகவும் இஸ்லமாபாத், பெஷாவர், கோஹட் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாவும். இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 400 பேர் பலியாகினர்.
மேலும், கடந்த 2005- ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரிக்டர் அளவுகோலில் பதிவான 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 73,000 பேர் பலியாகினர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: