

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், காபூலில் காவல் நிலையங்களின் அருகே மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதிகளில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தலிபான்கள் மற்ரும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என ஆப்கான் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பத்திரிகையாளர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்
இதையும் படியுங்கள்