

தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளர் பிரயுத் சான்- ஒசா தனது ராணுவ சீருடையை துறந்து, கோட் சூட்டுக்கு மாறியுள்ளார்.
தாய்லாந்து நாடாளுமன்றத் தில் திங்கள்கிழமை புதிய பட்ஜெட் தொடர்பாக அவர் உரையாற்றினார். அப்போது முதல்முறையாக அவர் கோட், சூட் அணிந்து வந்திருந்தார். முன்புவரை அவரை ராணுவ சீருடையில் மட்டுமே பார்த்து வந்தவர்களுக்கு அது வித்தியாசமான காட்சியாக அமைந்தது. தாய்லாந்து நாடாளுமன்றம் இந்த வார இறுதியில் பிரயுத் சான் ஒசாவை நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் செப்டம்பர் மாதம் தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். தாய்லாந்தில் பிரதமர் யங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, கடந்த மே மாதம் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. பிரயுத் சான்- ஒசா தலைமையிலான ஆட்சியில் ராணுவதளபதிகள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.