

ஆஸ்திரேலியா இந்தியா இடை யேயான அணுசக்தி உடன்பாடு, அடுத்த மாதம் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் இந்தியா வரும்போது கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும், அதை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் இருதரப்புக்குமிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இந் தியா வரும்போது அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும். உலகில் மூன்றில் ஒரு பங்கு யுரேனியம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.