Last Updated : 23 Apr, 2018 11:00 AM

 

Published : 23 Apr 2018 11:00 AM
Last Updated : 23 Apr 2018 11:00 AM

நிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி

அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றில் நிர்வாணமாக ஆடைகளின்றி வந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அமெரிக்கவின் டென்னிஸி மாகாண போலீஸார் தரப்பில், "டென்னிஸி மாகாணத்திலுள்ள நஷ்வில்லே நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள உணவு விடுதியில் ஆடைகளின்றி நிர்வாணமாக நுழைந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ட்ராவிஸ் ரென்கிங் என்று தெரிய வந்துள்ளது. இவர் கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் ” என்று கூறியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் பயன்படுத்திய துப்பாக்கியை போலீஸார் கைபற்றியுள்ளனர்.

மேலும், இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x