

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், "பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவிலுள்ள மவுண்ட் ஹகன் நகரத்தில் இன்று (சனிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 3 ஆக பதிவாகியது, இந்த நிலநடுக்கம் பூமிக் கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 125 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.