"அறத்தின்படி அமெரிக்க அதிபராக இருப்பதற்கு ட்ரம்ப் தகுதியற்றவர்"

"அறத்தின்படி அமெரிக்க அதிபராக இருப்பதற்கு ட்ரம்ப் தகுதியற்றவர்"
Updated on
1 min read

அறத்தின்படி அமெரிக்க அதிபராக இருப்பதற்கு ட்ரம்ப் தகுதியற்றவர் என்று எஃப்பிஐ முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கும் எஃபிபிஐ முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி கூறும்போது, "அதிபர் டிரம்ப் மருத்துவரீதியாக மனதளவில்  தகுதியானவரா என்று தெரியாது ஆனால், அமெரிக்க அதிபராக இருப்பதற்கு அறத்தின்படி தககுதியற்றவர்.

நமது அதிபர் மரியாதைக்குரியவராகவும், நமது நாட்டின் முக்கியத்துவங்களை கடைப்பிடிப்பவராக இருப்பது மிக முக்கியம். ஆனால், அதனை நமது அதிபர் செய்வது இல்லை" என்று கூறினார்.

முன்னதாக, ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இ-மெயில்களை ஹிலாரி நீக்கினார் என டிரம்ப் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.

அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர்.  விசாரணையின் முடிவில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடித்தத்தில் ஜேம்ஸ் கோமி, "ஹிலாரி குற்றம் புரிந்தார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எஃப்பிஐ-யின் இந்த முடிவில் மாற்றம் இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கோமி, எஃப்பிஐ பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in