

நாம் ஒருவர் மீது நம்பிக்கை வைக்கும் முன்னரே, நம்முடைய மூளை அவர்களை கணித்துவிடும் என்று சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.
இதுகுறித்து, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையிலுள்ள துணைப் பேராசிரியரான ஜோனாதன் ஃப்ரீமேன் கூறுகையில், “நாம் ஒருவரை நம்பும் முன்னரே, அவர்களது நம்பகத்தன்மை குறித்து நம் மூளை கணித்துவிடும் என்று எங்களின் கண்டுபிடிப்பு பரிந்துரைக்கிறது”, என்று தெரிவித்தார்.
இந்த கண்டுபிடிப்பு, நம் மூளையில் நமது சமூக மற்றும் உணர்வு செயற்பாட்டுக்கு காரணமான ‘அமிக்டாலா’ (Amygdala) என்ற கட்டமைப்பில் ஆய்வாளர்கள் நடந்திய ஆய்வாகும்.
இதற்குமுன் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வில், முகத்தின் நம்பகத்தன்மையைத் தீர்மானிப்பதில் 'அமிக்டாலா’ மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றது என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், ‘அமிக்டாலா’ (Amygdala) செயற்பாட்டையும், முகப்பாவனைகளின் படங்களையும் கொண்டு பல்வேறு விதமான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையில், அந்திய முகங்களின் ஒளிப்படங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மற்றொரு பரிசோதனையில், ஆய்வாளர்கள் ஒருவர் முகத்திலுள்ள நம்பத்தன்மையின் தொடர்ச்சியான தோற்றத்திற்கு ஏற்ப ‘அமிக்டாலா’வின் செயல் பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இவ்விரு பரிசோதனையில், 'அமிக்டாலா’வில் உள்ள ஒரு சில பகுதிகள் ஒரு முகம் எப்படி நம்பகத்தன்மையற்று உள்ளது என்பதை ஆராய்கிறது. அதிலுள்ள மற்றொரு பகுதிகள், ஒரு முகத்தின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை ஆராய்கிறது.
இந்த ஆய்வின் முடிவு, நரம்பறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.