இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு
Updated on
1 min read

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளர்கள் சங்க (ஐஎம்யு) மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் 2 இந்திய வம்சாவளி கல்வியாளர்களுக்கு கணிதவியல் துறையில் உயர்ந்த பரிசு வழங்கப்பட்டது.

இதில், கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளி பேராசிரியர் மஞ்சுல் பார்கவாவுக்கு கணிதத் துறை நோபல் பரிசு என அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 1974-ம் ஆண்டு கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியினரான மஞ்சுல் பார்கவா, அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. வடிவகணிதம், அரித்மெட்டிக் மற்றும் அல்ஜீப்ராவில் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்த தற்காக பார்கவாவுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவருக்கும் விருது

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரிய ராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுபாஷ் கோட்டுக்கு ரோல்ப் நெவான்லினா விருது வழங்கப்பட்டது. கணித விளையாட்டில் புதிய உத்திகளையும் வழிமுறை களையும் கோட் தனது ஆய்வில் விளக்கியுள்ளார்.

கணிதத்துறை நோபல் ஃபீல்ட்ஸ் பதக்கம் கணிதத்துறை யில் வழங்கப்படும் நோபல் என அழைக்கப்படுகிறது. இவ்விருது சர்வதேச கணித வியலாளர்கள் சங்கத்தால் நான்காண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இவ்விருது வழங்கும் விழாவில், ஈரானில் பிறந்து அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றி வரும் மரியம் மிர்ஸாகனி என்ற பெண்மணி உட்பட மொத்தம் நான்கு பேருக்கு பீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த பீல்ட்ஸ் பதக்கத்தைப் பெற்ற முதல் பெண்மணி மரியம் மிர்ஸாகனி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in