Published : 22 Apr 2018 09:17 AM
Last Updated : 22 Apr 2018 09:17 AM

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 92-வது பிறந்தநாள்

கடந்த 1926 ஏப்ரல் 21-ம் தேதி இரண்டாம் எலிசபெத் பிறந்தார். 1952-ம் ஆண்டில் அவர் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். 66 ஆண்டுகளாக அவர் ராணியாக உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான, நீண்ட காலம் ராணியாக இருக்கும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

அவர் வழக்கத்துக்கு மாறாக தனது 92-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ஒட்டி லண்டனில் நேற்று டாம் ஜோன்ஸ், கெய்லி மினோக், ஸ்டிங் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் கச்சேரி நடைபெற்றது. இதில் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x