Published : 16 Aug 2014 12:46 PM
Last Updated : 16 Aug 2014 12:46 PM

நவாஸ் ஷெரீப் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்: இம்ரான் கான் திட்டவட்டம்

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் கனடாவைச் சேர்ந்த மதகுரு தஹிருல் காத்ரி ஆகியோர், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இவ்விரு தலைவர்களின் ஆதரவாளர் களும் லாகூரிலிருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் நூற்றுக்கணக் கானோர் வியாழக்கிழமை பேரணியாக புறப்பட்டனர். இவர்கள் 300 கி.மீ. தூரத்தை 35 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமாபாதை வந்தடைந்தனர்.

இதையடுத்து, கொட்டும் மழையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான்கான் கூறும்போது, “கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடை பெற்றுள்ளது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் அந்தத் தேர்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும். புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். ஜனநாயகத்தை நான் தடம்புரளச் செய்யவில்லை. எனென்றால் நாட்டில் ஜனநாயமே இல்லை” என்றார். இம்ரான் கட்சியைச் சேர்ந்தவரும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வருமான பர்வேஸ் கட்டாக் கூறும்போது, “40 மணி நேரமாக உறக்கமின்றி போராட்டத் தில் ஈடுபட்டதால் இம்ரான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு தொண்டர்களை கேட்டுக்கொள் கிறேன்” என்றார்.

இதற்கிடையே காத்ரி ஆதர வாளர்கள் அடங்கிய பேரணியும் இஸ்லாமாபாதை வந்தடைந்தது. இதுகுறித்து காத்ரி செய்தியாளர் களிடம் கூறும்போது, “அனைத் தும் அமைதியாக நடைபெற்றது. நவாஸ் தலைமையிலான அரசு உடனடியாக பதவிவிலக வேண் டும். நாடாளுமன்றம் கலைக் கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்றார். ஆப்கன் எல்லையில் தீவிரவாதி களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில், அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x