Published : 12 Apr 2018 08:41 AM
Last Updated : 12 Apr 2018 08:41 AM

உலக மசாலா: போதை எலிகள்

ர்ஜென்டினா தலைநகருக்கு அருகில் இருக்கிறது பிலர் நகரம். அங்குள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 6 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை ஓர் அறையில் பத்திரமாக வைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறையைத் திறந்து பார்த்தபோது, 540 கிலோ போதைப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. கமிஷனர் எமிலியோ போர்டெரோ, தமது உதவியாளர் ஜாவியர் ஸ்பீசியாவிடம் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவருடன் இன்னும் இருவர் சேர்ந்து புலன் விசாரணையில் இறங்கினர். முதலில் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களை விசாரித்தனர்.

பிறகு போதைப் பொருட்கள் இருந்த அறையை ஆராய்ந்தனர். பிறகு மூன்று பேரும் மனிதர்கள் யாரும் போதைப் பொருட்களை எடுக்கவில்லை என்றும் எலிகள்தான் இரண்டு ஆண்டுகளில் 540 கிலோ போதைப் பொருட்களை காலி செய்திருக்கின்றன என்றும் தெரிவித்தனர். எமிலியோ போர்டெரோவுக்கு இந்த அறிக்கையில் நம்பிக்கை வரவில்லை. மீண்டும் வேறு சில நம்பகமான ஆட்களை விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் இது எலிகளின் வேலை என்று சில ஆதாரங்களுடன் நிரூபித்தனர். “எலிகளால் இவ்வளவு போதைப் பொருட்களை காலி செய்ய முடியும் என்று என்னால் இப்போதுகூட நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை” என்று சொல்கிறார் எமிலியோ போர்டெரோ. நிபுணர்கள் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். போதைப் பொருட்களை சாப்பிட்ட எலிகள் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அறையிலும் அறையைச் சுற்றியுள்ள இடங்களிலும் எலியின் உடல்கள் எதுவும் இருக்கவில்லை என்கிறார்கள். முதலில் காவல் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். இப்போது மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.

இந்த வேலையைச் செய்தது எலிகளா, மனிதப் பெருச்சாளிகளா?

மெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் விரக்தியடைந்தார் எரிக் ஹாகர்மன். உடனே பெரிய நிறுவனத்தில் தான் செய்த வேலையை ராஜினாமா செய்தார். கிராமப் பகுதியில் குடியேறினார். பன்றிப் பண்ணையை உருவாக்கினார். ட்ரம்ப் பற்றிய எந்தச் செய்தியும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டார். செய்தித்தாள்கள் வாங்குவதை நிறுத்தினார்.

தொலைக்காட்சியில் விளையாட்டு, வானிலை செய்திகளை மட்டுமே பார்த்தார். நண்பர்கள், உறவினர்களிடம் ட்ரம்ப் பற்றிய எந்தச் செய்தியையும் தன்னிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். கடைகளுக்குச் செல்லும்போது யாராவது ட்ரம்ப் பற்றி பேசி, அது தன் காதில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹெட்போனை மாட்டிக்கொண்டு சென்று வருகிறார். “எந்த மனிதர் மீதும் எனக்கு வெறுப்பு இருந்ததில்லை. ஆனால் ட்ரம்பை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அதனால்தான் என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன். ஓராண்டு காலமாக என்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். அப்படியும் ஒபாமா மருத்துவக் காப்பீடு, வடகொரிய அதிபர் குறித்த செய்திகள் என் கண்ணில் பட்டுவிட்டன. இந்த ஓராண்டில் இதுவரை நான் வாழ்ந்த காலங்களைவிட மகிழ்ச்சியாக இருக்கிறேன். பதற்றம் இல்லாமல் வாழ்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இப்படி இல்லாவிட்டால், ட்ரம்ப் செய்யும் செயல்களுக்கு என் மனநிலையும் உடல் நிலையும் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியாது” என்கிறார் எரிக் ஹாகர்மன்.

ஒரு மனிதரின் வாழ்க்கை முறையையே மாற்றிய ட்ரம்ப்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x