

பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்கு உளவு பார்த்தாக மேலும் 4 பாலஸ்தீனர்களை சனிக்கிழமை சுட்டுக்கொன்றது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டர்கள் 3 பேர் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குத லில் கொல்லப்பட்டனர். அவர் கள் பதுங்கியிருந்த இடம் துல்லிய மாக தாக்கப்பட்டதற்கு, உள்ளூர் பாலஸ்தீனர்களே காரணம் என்ற சந்தேகம் ஹமாஸ் அமைப் புக்கு ஏற்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை 3 பேர், வெள்ளிக் கிழமை 18 பேர் என சக மக்கள் 21 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்றது. இந்நிலையில்சனிக்கிழமை மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஜபலியா அகதிகள் முகாமில் உள்ள மசூதி வளாகத்தில், இவர்களை ஹமாஸ் அமைப் பினர் சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் ஹமாஸ் அமைப் பால் கொல்லப்பட்ட பாலஸ் தீனர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 25 பேரும் முகத்தை மூடியே கொல்லப்பட்டனர். இத னால் கொல்லப்பட்டவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
ஹமாஸ் அமைப்பின் இந்த செயலுக்கு மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுபோன்ற கொடூர செயலை உடனே நிறுத்தவேண் டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே இஸ்ரேல் தாக்கு தலில் உயிரிழந்த பாலஸ் தீனர்களின் எண்ணிக்கை சுமார் 500 குழந்தைகள் உள்பட 2,102 ஆக உயர்ந்துள்ளது. காய மடைந்தவர்கள் எண்ணிக்கை 10,550 ஆக உள்ளது. இஸ்ரேல் தரப்பில் இறந்தவர்கள் எண் ணிக்கை 68 ஆக உள்ளது.