Published : 02 Apr 2018 04:08 PM
Last Updated : 02 Apr 2018 04:08 PM

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்: கேப் டவுனின் மாற்றங்கள்

 ‘டே ஜீரோ’ நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு உலகில் முதல் முறையாக தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப் டவுனில் தொடர்ந்து மூன்று ஆறு ஆண்டுகளாக மழை பொழியா காரணத்தினால், அந்நகரில் இருந்த ஆறு ஏரிகளும் வறண்டு விட்டன.

சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப் டவுன் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியை சந்திந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டவுனில் நிலவும் வறட்சியை தேசியப் பேரிடராக தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்தது.

ஏப்.16-ல் அந்நகரத்தில் குடிநீர் முழுவதும் தீர்ந்துபோய் ‘டே ஜீரோ’ எனப்படும் பூஜ்ஜிய நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் கேப்டவுன் அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு உதவ கேப்டவுனின் ’டே ஜீரோ’ நாள் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

இத்தகைய நிலையில் தினமும் 50 லிட்டர் தண்ணீர்ருடன் தங்கள் நாளை கழிக்க கேப்டவுன் நகரவாசிகள் பழக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த 50 லிட்டர் தண்ணீரை எப்படி சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கேப்டவுன் நகர வாசிகள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

 

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் தண்ணீரைப் பாதுகாக்க கேப் டவுனில்தான் உலகின் முதல் தண்ணீர் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக 60 காவல் அதிகாரிகள் அரசல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ரிச்சர்ட் போஸ்மன் கூறும்போது, "மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். தண்ணீர் பற்றாக்குறைக்கு இந்த நகரத்தை குற்றம் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.தண்ணீரை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது. அவர் எண்ணம் மாற்றமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீரைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

கேப் டவுனில் காரைத் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வது மேலும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவதும் விரோதாமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x