

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனமானது, "நைஜீரியாவில் பெனு மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றில் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பாதிரியார்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கால்நடை மேய்க்கும் முஸ்லிம் சமூகத்தினர் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே அப்பகுதியில் உள்ள 10 வீடுகளுக்கு தீ வைத்து அங்குருக்கும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன.
நைஜீரியாவின் தென் மத்திய பகுதியில் கிறிஸ்தவர்கள் வேளாண் தொழிலும், இஸ்லாமியர்கள் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாக மோதல் நிலவி வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட மோதலில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.