Published : 26 Apr 2018 12:02 PM
Last Updated : 26 Apr 2018 12:02 PM

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்: பிரான்ஸ் அதிபர் மக்ரோன்

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மக்ரோனின் இந்தப் பயணத்தில் அமெரிக்கா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான உறவு, ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம்  போன்றவை முக்கியம் அங்கம் வகித்தன.

இந்த நிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா விரைவில் இணையும் என்று மக்ரோன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து புதன்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் இம்மானுவேல் மக்ரோன் பேசும்போது, "நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தியாகம் செய்து ஒருவேளை உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறோமா?  நாம் கடற்கரையை அழிக்கிறோம்.  கரியமில வாயுக்களை வெளியிட்டு நமது பல்லுயிர்த் தன்மையை அழித்துக்கொண்டு இருக்கிறோம். மாற்று உலகம் இல்லை.  யதார்த்தங்களை தற்போது எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒரு நாள் நிச்சயம் அமெரிக்கா பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும். சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு , பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக உள்ளது. அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால், இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் இந்த முடிவை பல உலக நாடுகள் விமர்சித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x