வியட்நாமில் மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ட்ரூங் மை லான்
ட்ரூங் மை லான்
Updated on
1 min read

ஹனோய்: வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட வந்த அவர், அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2022-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 67. சுமார் 12 பில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது அந்த நாட்டின் ஜிடிபியில் கிட்டத்தட்ட 3 சதவீதம் எனத் தெரிகிறது.

2012 - 2022 வரையிலான காலகட்டத்தில் அரசு தரப்பு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சைகோன் கூட்டுப் பங்கு வணிக வங்கியை லான், சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி உள்ளார். நிதியையும் முடக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு.

அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் வியட்நாம் நாட்டில் சொகுசு குடியிருப்புகள் கட்டுமானம், அலுவலகம், விடுதிகள் மற்றும் ஷாப்பிங் சென்டர் போன்ற ப்ராஜெக்ட் சார்ந்த பணிகளை கவனித்து வந்துள்ளது. அந்த நாட்டில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு அந்த நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டது. இருந்தாலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in