Published : 20 Apr 2018 12:02 PM
Last Updated : 20 Apr 2018 12:02 PM

கியூபாவில் முடிவுக்கு வந்தது 60 ஆண்டுகால காஸ்ட்ரோ ஆட்சி: புதிய அதிபராக மிகேல் டயஸ் தேர்வு

 கியூபாவில் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ பதவி ராஜினாமா காரணமாக அந் நாட்டின் அதிபராக மிகேல் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கியூபாஅரசியலிலும், வெளி நாடுகளுடான உறவிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தார் ரவுல். அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்த போது கியூபா - அமெரிக்க உறவில் முன்னேற்ற ஏற்படுவதற்கான பல நடவடிக்கைகளில் இறங்கினார் ரவுல். இதற்காக ராவல் மீது விமர்சனங்களும் எழுந்தன.

அதன்பின்னர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, கியூபா - அமெரிக்கா உறவில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் கியூபா அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக ரவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். இதன் மூலம் கியூபாவை சுமார் 60 ஆண்டுக்கால ஆட்சி செய்த காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவு வந்தது.

கியூபாவின் அதிபராக ரவுல்காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பராக அறியப்படும் 57 வயதான மிகேல் டயஸ்ஸை நாடாளுமன்றம் நியமித்துள்ளது.

அதிபர் பதவியில் இருந்து விலகினாலும் 2021-ஆம் ஆண்டு வரை கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ரவுல் காஸ்ட்ரோவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x