உலகின் மிக வயதான மனிதர்: வெனிசுலாவின் ஜூவான் 114 வயதில் காலமானார்

ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா
ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா
Updated on
1 min read

காராகாஸ்: கடந்த 2022-ம் ஆண்டில் உலகின்மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா நேற்று முன்தினம் தனது 114 வயதில் காலமானார்.

ஜுவான் விசென்டே 2022, பிப். 4 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றபோது அவருக்கு 112 வயது மற்றும் 253நாட்கள். அப்போது அவர் உலகின்மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். ஜுவான் விசென்டே 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

ஜுவான் விசென்டே 1909 மே 27-ல் ஆன்டியன் மாகாணம் தச்சிராவில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். 10 குழந்தைகளில் அவர் 9-வது குழந்தையாக பிறந்தார்.

ஐந்தாவது வயதில், தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து விவசாய பணிகளைத் தொடங்கிய அவர். கரும்பு, காபி ஆகியவற்றின் அறுவடைக்கு உதவியதாக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in