

ரஷ்யாவுக்கு ராணுவ உபகர ணங்கள் மற்றும் எரிசக்தி துறைக்கான உயர்தொழில்நுட்ப சாதனங்கள் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு எதிராக முதல் முறையாக ஒட்டுமொத்த பொரு ளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி யாளர்களுக்கு உதவுவதை ரஷ்யா நிறுத்திக் கொள்ளாத தற்காக இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான முடிவு பிரசெல்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற ஐரோப்பிய யூனியன் பிரதி நிதிகள் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
ஐரோப்பிய நிதிச் சந்தைகளை ரஷ்ய வங்கிகள் தொடர்பு கொள்வதற்கும் இக்கூட்டத்தில் தடை விதிக்கப் பட்டது.