

வயது மூப்பின் காரணமாக வரும் அல்ஸைமர் எனும் மறதி நோய்க்கும், பார்க்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோய்க்கும் மாதுளம் பழத் தோலை மருந்தா கப் பயன்படுத்த முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மாதுளம் பழத் தோலில் இருந்து எடுக்கப்படும் சாற்றை மூலக் கூறாகப் பயன்படுத்தி, இந்நோய்க ளுக்கு மருந்தாகப் பயன்படுத் தலாம் என, இங்கிலாந்தின் ஹட்டர் ஸ்பீல்டு பல்கலைக்கழக விஞ்ஞானி ஒலுமயோகுன் ஒலாஜிடே என்பவர் கண்டறிந்துள் ளார்.
மேலும் இதே மூலக்கூறைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மருந்தை முடக்குவாதத்துக்கும் (Rheumatoid arthritis) தீக்காயத்துக்கும் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என கண்ட றியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஒலாஜிடே கூறும்போது, “மாதுளம்பழத்தை தினசரி உண்டால், ஆரோக்கியத் துக்கு ஏற்ற பலவித நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். டிமென்ஷியா எனப்படும் மறதி நோயை தடுக்கும் ஆற்றல் மாதுளம்பழத்துக்கு உண்டு.
பெருமளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள் மாதுளம் பழத்தின் வெளிப்புறத் தோலில் தான் உள்ளன. மாதுளம்பழ விதை களில் அல்ல. அல்ஸைமர் நோயை குணப்படுத்த முடியாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மோசமான நிலைக்கு ஆளாகின்றனர்.
ஆனால், மாதுளம்பழத் தோலிலிருந்து கண்டறியப்பட்ட புதிய மூலக்கூறு அல்ஸைமரைத் தடுக்கும் அல்லது அதன் தீவிரத்தைக் குறைக்கும்” என்றார்.