இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி : நாளை பசுபதிநாத் கோயிலில் வழிபடுகிறார்

இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி : நாளை பசுபதிநாத் கோயிலில் வழிபடுகிறார்
Updated on
1 min read

நேபாளத்தில் 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள புகழ் பெற்ற பசுபதிநாத் கோயிலில் 30 நிமிடங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்ய உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டு செல்லும் மோடி, பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பசுபதிநாத் கோயிலுக்கு திங்கள்கிழமை செல்கிறார். அங்கு பிரதான் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு நடைபெறும் பஞ்சாமிர்த குளி யலை பார்வையிடுகிறார்.

பின்னர் கோயில் தலைமை பூஜாரியும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவருமான கணேஷ் பட்டாவிடமி ருந்து பிரசாதம் பெற்றுக் கொள்வார். பிறகு கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள பாசுகி கோயி லிலும் மோடி வழிபாடு செய்கிறார். கோயிலுக்கு செல்லும் மோடியை வரவேற்கும் வகையில், வேத வித்யாஷ்ரத்தைச் சேர்ந்த 108 இளம் பிராமண மாணவர்கள் மந்திரம் ஓதுவார்கள்.

இந்தப் பயணத்தின்போது, மோடிக்கு பசுபதிநாத் கோயிலின் மாதிரியை, கோயில் நிர்வாகத்தினர் வழங்குவார்கள். உலகில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயில்களில் பசுபதிநாத் கோயிலும் ஒன்றாகும். இதை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in