உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்: 126-வது இடத்தில் இந்தியா

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஒட்டாவா: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் ஐஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருவாய், சமூக ஆதரவு, சுகாதாரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை கனடா பொருளாதார நிபுணர் ஜான் எப் ஹெலிவெல், ரிச்சர்ட் லயார்ட், ஜெப்ரி சாக்ஸ், ஜேன் இமானுவேல் டி நெவி, லாரா பி அகினின் மற்றும் ஷன் வாங் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தலிபான்கள் நிர்வாகத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இதில் முதல் 20 இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்த இரண்டு நாடுகளும் முதல் 20 இடங்களில் இடம்பெறவில்லை. அமெரிக்கா 23-வது இடத்திலும் ஜெர்மனி 24-வது இடத்திலும் உள்ளன. கோஸ்டாரிகா (12), குவைத் (13) ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in