Published : 26 Feb 2018 01:44 PM
Last Updated : 26 Feb 2018 01:44 PM

பாகிஸ்தானில் நேரலையில் சண்டையிட்ட செய்தி வாசிப்பாளர்கள்: வைரல் வீடியோ

 பாகிஸ்தானில் நேரலை ஒளிப்பரப்பின்போது இரண்டு செய்தி வாசிப்பாளர்களிடையே  ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது வைரல் வீடியோவாக பரவி வருகிறது.

பாகிஸ்தானில் செயல்படும் DP WEB TV -யில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

அந்த செய்தி நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கு எந்த செய்தியை யார் வாசிக்க வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டது.

 இதில் இருவருக்கு விவாதம் ஏற்பட  விவாதம் இறுதியில் சண்டையாக மாறியது. அவர்களின் இச்சண்டை அப்படியே நேரலையாக ஒளிப்பரப்பாகியது.

இந்தச் சண்டையை பார்வையாளர்கள் பலரும் சுவாரசியமாக பார்த்து மகிழ்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்னும் சிறிது நேரம் இவர்கள் சண்டை நீடித்திருந்தால், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கே இவர்கள் போட்டியாகி இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x