கடல் மட்ட உயர்வை வேகப்படுத்தும் பருவநிலை மாற்றம்: செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடிப்பு

கடல் மட்ட உயர்வை வேகப்படுத்தும் பருவநிலை மாற்றம்: செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

பருவநிலை மாற்றம் கடல் மட்டம் உயர்வதை வேகப்படுத்தியிருப்பதாக சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொலராடோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 1993ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடல் மட்டம் எந்த அளவு இருந்துவந்துள்ளது, உயர்ந்துள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக அலைகளின் அளவை வைத்து செய்யப்படும் ஆய்வாக இல்லாமல், செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இது சர்வதேச அளவில் கடல் மட்ட உயர்வின் அளவை இன்னும் துல்லியமாக காட்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் 7 செண்டிமீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, வருடத்துக்கு 3 மில்லிமீட்டர் உயர்வு என்ற அளவை ஒத்துப்போவாதாக உள்ளது. ஆனால் இந்த உயர்வு நிலையான அளவல்ல.

தொடர்ந்து அதிகரித்து வரும் பசுங்குடில் வாயுக்கள் (greenhouse gases) வெளியேற்றத்தால் பூமியின் வளிமண்டலம் வெப்பமடைந்து வருகிறது. இதனால் கடல்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதுவே கடல் மட்டம் உயரவும் காரணமாக உள்ளது.

க்ரீன்லேண்ட் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் இருக்கும் கடல்பகுதியில், பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதால் கடல் மட்ட உயர்வும் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 2100ஆம் ஆண்டில் 60 செண்டிமீட்டர் வரை கூட கடல் மட்டம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

65 செண்டிமீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தால், கடலோரமாக இருக்கும் நகரங்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். மேலும், உயர் அலைகள், வலுவான புயலால் ஏற்படும் கடல் சீற்றம் என இந்த பாதிப்பு பன்மடங்காகும் ஆபத்தும் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in