கேப் டவுனுக்கு பிறகு தண்ணீர் தீரவிருக்கும் 11 நகரங்களின் பட்டியலில் பெங்களூரு

கேப் டவுனுக்கு பிறகு தண்ணீர் தீரவிருக்கும் 11 நகரங்களின் பட்டியலில் பெங்களூரு
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்க நகர் கேப் டவுன். ஏப்.16-ல் அந்நகரத்தில் குடிநீர் முழுமையும் தீர்ந்துபோய் ‘டே ஜீரோ’ எனப்படும் பூஜ்ஜிய நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் கேப் டவுன் அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு உதவியதால் கேப்டவுனின் டே ஜீரோ நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேப் டவுனைப் போன்று விரைவில் தண்ணீர் தீர்த்துபோகும் வாய்ப்புள்ள 11 நகரங்களுக்கு தண்ணீர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் தீர்ந்து போகும் நகரங்களில் முதலாக கேப் டவுன் உள்ளது. கேப்டவுனுக்கு அடுத்து தண்ணீர் தீர்ந்து போகும் வாய்புள்ள நகரங்களில் இந்தியாவின் பெங்களூருவும்  இடப்பெற்றுள்ளது.

ஐ.நா.வின் கணிப்பு:

பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது. உலகில் சுமார் ஒரு கோடி மக்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பத்தில் உள்ளனர் என ஐ நா கூறுகிறது.

தண்ணீர் தீர்ந்து வாய்ப்புள்ள 11 நகரங்களின் விவரம்:

சா பாலோ

பிரேசிலின் பொருளாதார நகரம் என்று அழைக்கப்படும் சா பாலோ மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று. சா பாலோ நகரமும் கடந்த 2015 ஆம் ஆண்டு கேப்டவுன் சந்தித்துவரும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தது. தண்ணீர் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது  3 கோடிக்கு அதிகமான மக்களுக்கு வெறும் 20 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருந்தது. தண்ணீர் திருட்டை தடுக்க போலீஸார் பெரும் துயரப்பட்டனர்.

அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டாலும் அரசின் போதிய நடவடிக்கை மற்றும் திட்டங்கள் இல்லாததால் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளது, எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

பெங்களூரு

தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும், இந்தியாவின் பெங்களூரு நகரமும் இந்தப் பட்டியலில் இடப்பெற்றுள்ளது. தொழில் நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் பெங்களூரின் அதீத வளர்ச்சியால் நீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகளை நிர்வகிக்க முடியாமல் அந்நகர நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். பெங்களூரில் நிலைமை மோசமாவதை தவிர்ப்பதற்கு பழைய குழாய் முறை தேவை என்று அரசு வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாது அந்நகரில் உள்ள 85 % தண்ணீர் குடிநீர் உபயோகத்துக்கு உகந்ததல்ல எனவும், பெங்களூரிலுள்ள பெரும்பாலான ஏரிகள் மாசசடைந்துள்ளதாக அதில் உள்ள ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்

உலக மக்கள் தொகையில் 20% சீனா கொண்டுள்ளது, ஆனால் அங்கு குடி நீர் உபயோகத்துக்கான தண்ணீர் வெறும் 7% மட்டுமே உள்ளது. கடந்த 2014 ஆம் நாண்டு 2 கோடி சீன  மக்களுக்கு 145 கியூபிக் மீட்டர்ஸ் அளவு தண்ணீர் இருந்தது. அதுமட்டுமில்லாது 2000 முதல் 2009 வரை 13 % வரை சீனாவில் தண்ணீர் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொலம்பிய பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

ஜகார்தா

பல கடற்கரை நகரங்களை போன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவும் கடல் நீர் மட்டம் உயர்வால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.  நகரில் 1 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை பொழிந்து திறந்தவெளி கான்க்ரீட்  நிலங்களால்  மழைநீரை நிலம் உறிஞ்சமுடியாத நிலையில் உள்ளது.

கெய்ரோ

உலகின் சிறந்த  நகரங்களில் ஒன்றான எகிப்தின் கைரோவில் உள்ள நைல் நதி நவீன காலத்துடன் போராடி வருகிறது. அங்கு அதிகரித்து வரும் மாசினால்  அந் நகரம் விரைவில் தண்ணீர் பற்றாக்குறை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

மாஸ்கோ

ஒரு காலாண்டுக்கு தேவையான தண்ணீரை ரஷ்யா கொண்டிருக்கிறது. எனினும் இந்த நூற்றாண்டின்  கடுமையான மாசினால் ரஷ்யா பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள தண்ணீரில் 35 % முதல் 60% சதவீதம் தண்ணீர் பயன்பாட்டிற்கான தரத்தை பெற்றிருக்க என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்

துருக்கியின் முக்கிய நகரமான   இஸ்தான்புல்லில் 2016-ம் ஆண்டு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர்  அளவு 1700 கன மீட்டருக்கும் குறைவாக சென்றுவிட்டது. இதனால் 2030க்குள் துருக்கியில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ சிட்டி

மெக்சிக்கோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில்  2 கோடி மக்களுக்கு குடி நீர் பற்றாக்குறை ஏதும் தற்போது இல்லை.  ஆனால் இந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே தண்ணீர் அளிக்கப்படுகிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் வழங்கப்படுகிறது. குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் சுமார் 40%தண்ணீர் வரை வீணாகிறது.

லண்டன்

லண்டனில் ஆண்டுக்கு 600 மில்லி மீட்டர் மட்டுமே மழை பொழிகிறது. இந்த நிலை தொடர்ந்தால் லண்டன் கூடிய விரைவில் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று கணிக்கடப்பட்டுள்ளது.

டோக்கியோ

ஜப்பான் தலை நகர் டோக்கியோவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் 3 கோடி மக்கள் 70 சதவீத நீர் தேவையை ஆறுகள், ஏரிகள், மற்றும் உருகிய பனி ஆகியவறற்றை நம்பியே உள்ளனர்.

மியாமி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள மியாமி நகரமும் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது. நன்கு மழை பெய்யும் இடங்களில் அமெரிக்க புளோரிடா மாகாணமும் ஒன்று. இருப்பினும், மியாமி நகர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளது.  கடல் மட்ட உயர்வின் காரணமாக உப்புநீர் ஊடுருவல் காரணமாக  அந்த நகரிலுள்ள  ஆறு கிணறுகள் மூடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in