

கியூப புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 68.
கடந்த பல மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தத்துக்காக சிகிச்சை பெற்றுவந்த அவர் அண்மையில்தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார்.
இருப்பினும், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் தற்கொலை செய்துகொண்டார்.