

ஆப்கானிஸ்தானில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஏ.பி. செய்தி நிறுவனத்தின் புகைப்பட பெண் நிருபர் அஞ்சா நைட்ரிங்கஸ் (48) கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக காரில் அமர்ந்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) பத்திரிக்கை நிறுவனத்தின் புகைப்பட பெண் நிருபர் அஞ்சா நைட்ரிங்கஸ் உயிரிழந்தார். ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல புகைப்படக்காரரான அவருடன் இருந்த கெனடிய பெண் நிருபர் கேத்தி கெனான் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தார்.
அஞ்சா மற்றும் கேத்தி இருவரும் அசோசியேட் பிரஸ் நிறுவனத்திற்கான நிருபர்களாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்தனர். அவர்கள் இருவரும் பல வருடங்களாக இணைந்து ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்துவரும் இன மோதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
இது தொடர்பாக அவர்களுடன் இருந்த நிருபர் ஒருவர் கூறுகையில், செய்தி சேகரிப்பதற்காக வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த போது, கார் கண்ணாடி அருகே வந்த போலீசார் 'அல்லா ஹு அக்பர்' என்று கூறி அஞ்சா மற்றும் கேத்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளார்.