Published : 21 Feb 2024 06:00 AM
Last Updated : 21 Feb 2024 06:00 AM

லாட்டரியில் ரூ.2,800 கோடி வென்றவருக்கு பணம் தர மறுப்பு: தவறுதலாக இடம்பெற்றதாக விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் கடந்த ஜனவரி 6-ம் தேதி பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டாலர் (ரூ.2,800 கோடி) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. லாட்டரி நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்றுஅந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ்.

இதையடுத்து லாட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லாட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், ஜான் சீக்ஸிடம், “உங்கள் எண்ணுக்கு லாட்டரி விழவில்லை. தவறுதலாக உங்கள் எண் குறிப்பிடப்பட்டுவிட்டது. உங்கள் லாட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள். இனி அது பயனற்றது” என்று கூறியுள்ளார்.

இதனால், ஜான் சீக்ஸ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது அந்த லாட்டரி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், “லாட்டரி நிறுவனத்தின் செயல்பாடு அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜான் சீக்ஸுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x